வளாகத்திலும் இப்பாடத்தை கற்பிக்கும் பேராசிரியர், லாரி சாண்டோஸ் கூறுகையில், மாணவர்களிடம் இக்கல்வியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய போதே மிகவும் பிரபலமடைந்தது

ஆன்லைனிலும், பல்கலை., வளாகத்திலும் இப்பாடத்தை கற்பிக்கும் பேராசிரியர், லாரி சாண்டோஸ் கூறுகையில், மாணவர்களிடம் இக்கல்வியை முதன் முதலில் அறிமுகப்படுத்திய போதே மிகவும் பிரபலமடைந்தது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் இக்கட்டான சூழலை எதிர்கொள்ள அறிவியலை தேடி வருகின்றனர். அவர்களுக்கு கிடைத்திருக்கும் கூடுதல் நேரத்தினை இவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகின்றனர். யேலின் 300 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வகுப்பாக இது திகழ்கிறது. ஒட்டுமொத்த மாணவர் அமைப்பில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் இக்கல்வியை தேர்ந்தெடுத்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அப்பாலும் இக்கல்விக்கு சந்தை இருப்பது தெரியவந்துள்ளது' என கூறினார்.


எவ்வாறு இப்பாடத்திட்டம் அமைந்துள்ளது?



மகிழ்ச்சியான நபர்களின் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்து, அவற்றை மகிழ்ச்சியற்ற நபர்களிடம் சோதனை செய்து பார்த்து, அவர்களின் நலன் மேம்படுவதை அறிந்துள்ளனர். மகிழ்ச்சியை அறிவியல் பூர்வமாக அணுகுவது வித்தியாசமாக இருந்தாலும், இது ஆய்வின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவை படிப்பவர்களின் மனநிலையை பொருத்தே அமையும்.